ADDED : ஏப் 11, 2025 04:58 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் சமரச தீர்வு நாளை முன்னிட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் டூவீலர் ஊர்வலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி அறிவொளி துவக்கி வைத்தார்.
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வு மைய பணிகள் குறித்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி தலைமையில் நீதிபதிகள் வழக்கறிஞர்கள், பணியாளர்கள் காஞ்சிரங்கால் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சமரச தீர்வு நாள் குறித்து துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கினர்.
குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பசும்பொன் சண்முகையா, சார்பு நீதிபதி பாண்டி, ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி செந்தில் முரளி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ராதிகா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 நீதிபதி செல்வம், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தீபதர்ஷினி, குற்றவியல் நீதிதுறை நடுவர் எண் 2 நீதிபதி தங்கமணி, வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர்.