ADDED : மார் 08, 2024 12:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: திருவேகம்பத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மானாமதுரை தயாபுரம் டி.எல்.எம். மருத்துவமனை இணைந்து கைலாசநாதபுரத்தில் நடத்திய மருத்துவ முகாமை நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் துவக்கி வைத்தார்.
துணை தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். முகாமில் தொழுநோய்,, தோல் நோய் சம்பந்தமான பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நடத்தினர்.
பரிசோதனையை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து வழங்கப்பட்டன.
வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த் குமார், மானாமதுரை டாக்டர் ஆண்ட்ரியா தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதனையில் ஈடுபட்டனர்.
இயல்முறை டெக்னீசியன் வனஜா, மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் வேல்முருகன், நகராட்சி சுகாதார அலுவலர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் பிச்சையம்மாள், பங்கேற்றனர். ஆலோசகர் முருகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

