நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அருகே மவுண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகண்டரி பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட சுகாதார அலுவலர் மீனாட்சி, அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் சீனிவாசன், இணை இயக்குநர் அருள்தாஸ், கீழப்பூங்குடி வட்டார மருத்துவ அலுவலர் பார்த்தசாரதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவகுமார் உள்ளிட்ட டாக்டர்கள் முகாமை நடத்தினர்.
1500க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றனர். பள்ளி தாளாளர் பால கார்த்திகேயன், திட்ட இயக்குநர் கங்கா, பள்ளி மேலாளர் தியாகராஜன், கல்வி திட்ட இயக்குநர் சுப்ரஜா, துணை முதல்வர் அகிலாண்டேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

