/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் நாய்களுக்கு தடுப்பூசி
/
திருப்புவனத்தில் நாய்களுக்கு தடுப்பூசி
ADDED : நவ 09, 2025 07:12 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் நாய் கடியால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் பேரூராட்சி அதிகாரிகள் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்புவனத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இறைச்சி கடைகளில் வீசி எறியப்படும் கழிவுகளை உண்பதற்காக 100க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன. இறைச்சி கழிவு கிடைக்காத காலங்களில் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு வெறி பிடித்து ரோட்டில் செல்பவர்களை விரட்டி கடிப்பதுடன் வீட்டினுள் புகுந்தும் பொதுமக்களை கடித்து குதறி வருகிறது.
இதனையடுத்து பேரூராட்சி சார்பில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. செயல் அலுவலர் கவிதா தலைமையில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் பாண்டியன், தூய்மை பணியாளர்கள் வலை மூலம் நாய்களை பிடித்து அல்லிநகரம் கால்நடை மருத்துவர் பிரபு மூலம் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

