/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை; டாக்டர்கள் பற்றாக்குறையால் தொய்வு
/
மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை; டாக்டர்கள் பற்றாக்குறையால் தொய்வு
மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை; டாக்டர்கள் பற்றாக்குறையால் தொய்வு
மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை; டாக்டர்கள் பற்றாக்குறையால் தொய்வு
ADDED : நவ 30, 2024 06:33 AM
காரைக்குடி; சிவகங்கை மாவட்ட பள்ளிகளில் குழந்தைகள் சுகாதார பரிசோதனை திட்டம் டாக்டர்கள் பற்றாக்குறையால் கேள்விக்குறியாகி வருகிறது.
மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் குழந்தைகள் சுகாதார பரிசோதனை மற்றும் ஆரம்ப சேவைகள் திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு ஆண்டுக்கு இருமுறை பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு முறை மட்டுமே பரிசோதனை நடந்து வருகிறது. வட்டாரத்தில்,ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் டாக்டர் என இருவர் இப்பணியில் ஈடுபடுவர்.
பள்ளி குழந்தைகளுக்கு உள்ள பிறவி குறைபாடு, கண், பல், பொதுவான நோய், ரத்த சோகை, இதய நோய், உட்பட பல்வேறு நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.
இது கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
ஆனால் மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளில் இப் பரிசோதனை தற்போது முறையாக நடைபெறுவதில்லை. திட்டத்தை செயல்படுத்த முடியாததோடு மாணவர்களின் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகி உள்ளது. பல வட்டாரத்தில் போதிய டாக்டர்கள் இல்லாததே இப்பிரச்னைக்கு காரணம் என புகார் எழுந்துள்ளது.
மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், பள்ளிகளில் மாணவர்களுக்கு பரிசோதனை செய்ய வட்டாரத்திற்கு 2 டாக்டர்கள் இருப்பார்கள். பல இடங்களில் தற்போது ஒரு டாக்டர் மட்டுமே உள்ளார். மாணவர்களுக்கு பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்படலாம். ஆனால் பள்ளிகளில் பரிசோதனை நடைபெறாமல் இருக்காது.
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தொய்வின்றி முறையாக பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.