/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எஸ்.புதுார் மலைப்பாதையில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவு
/
எஸ்.புதுார் மலைப்பாதையில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவு
எஸ்.புதுார் மலைப்பாதையில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவு
எஸ்.புதுார் மலைப்பாதையில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவு
ADDED : ஆக 12, 2025 05:50 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே எஸ்.புதுார் செல்லும் மலைப்பாதையில் மேலவண்ணாரிருப்பு அருகே நேற்று யாரோ மருத்துவக் கழிவுகளை கொட்டிச் சென்றுள்ளனர். பயன் படுத்தப்பட்ட ஊசி, மருந்து பாட்டில், காலா வதியான மாத்திரை, காயங்களுக்கு பயன்படுத்தப்பட்ட துணிகள் உள்ளிட்டவை பல இடங்களில் கொட்டப்பட்டிருந்தது.
இம்மலைப்பாதையில் அடிக்கடி கோழி கழிவு, குப்பை, மருத்துவக் கழிவுகளை சிலர் கொட்டி செல்கின்றனர்.
அடிவாரத்தில் உள்ள ஊருணி தண்ணீரை அப்பகுதி மக்கள் குடித்து வரும் நிலையில் மலைப்பகுதியில் கொட்டப்படும் இந்த கழிவுகளால் ரசா யனம் தண்ணீரில் கலந்து உடல்நல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே உரிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி மலையில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.