ADDED : செப் 24, 2025 08:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காளையார்கோவில் : காளையார்கோவில் அருகே ஒருபோக்கி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் 52. இவர் வீட்டில் 50க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழி வளர்த்து வருகிறார். இவரது கோழிகள் நேற்று முன்தினம் அருகே உள்ள வயலில் இரைதேடி சென்றது.
அந்த வயலில் பூச்சி மருந்து அடித்திருந்ததால் அந்த இடத்தில் இரை உண்ட 28 கோழிகள் இறந்தது. சேகர் காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார்.