/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மேலுார்-காரைக்குடி நான்கு வழிச்சாலை பணி: நான்கு ஆண்டுகளை கடந்தும் பணி முடியவில்லை
/
மேலுார்-காரைக்குடி நான்கு வழிச்சாலை பணி: நான்கு ஆண்டுகளை கடந்தும் பணி முடியவில்லை
மேலுார்-காரைக்குடி நான்கு வழிச்சாலை பணி: நான்கு ஆண்டுகளை கடந்தும் பணி முடியவில்லை
மேலுார்-காரைக்குடி நான்கு வழிச்சாலை பணி: நான்கு ஆண்டுகளை கடந்தும் பணி முடியவில்லை
ADDED : நவ 08, 2024 04:27 AM

சிவகங்கை மாவட்டம்காரைக்குடியிலிருந்து மதுரை மாவட்டம் மேலுார் வரையிலான நெடுஞ்சாலையில் தினமும்15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. வரும் காலங்களில் இது மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில்,போக்குவரத்து நெரிசலைசரி செய்ய 2020ம் ஆண்டு மேலுார் முதல் காரைக்குடி வரையிலான45 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.659.03 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
துாரமும் நேரமும் குறைவு
மேலுார் டூ காரைக்குடி நான்கு வழிச்சாலையில், 20 க்கும் மேற்பட்ட சுரங்க வழி பாதைகள், 19 சிறிய பாலங்கள், 9 பெரிய பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தவிர பேருந்து நிறுத்தங்கள், பேருந்து நிழற் கூடங்கள், ஓய்வெடுக்கும் அறைகள்,கனரக வாகனங்கள் நிறுத்துமிடமும் அமைக்கப்பட உள்ளன.
இச்சாலை அகலப்படுத்தும் பணியால், 14 கி.மீ., துாரம் குறைவதோடு, மேலுார் -காரைக்குடி செல்லும் நேரம் ஒரு மணி நேரம் 15 நிமிடம் 45 நிமிடங்களாக குறையும்.
காரைக்குடியில் இருந்து பிள்ளையார்பட்டி வரை முன்பு இருந்த சாலையே அகலப்படுத்தப்படுகிறது. பிள்ளையார்பட்டி யில் இருந்து மேலுார் வரையில் கிரீன்பீல்ட் வகையிலான சாலை அமைக்கப்படுகிறது.
பணியில் தாமதம்
மேலுார் காரைக்குடி நெடுஞ்சாலை பணியானதுகடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டது
2 ஆண்டிற்குள் பணி முடிக்கப்பட வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக பணியில் தொய்வு ஏற்பட்டது. பணி தொடங்கி நான்கு ஆண்டுகளை எட்டிய நிலையில் பணி இதுவரை முடிவுக்குவரவில்லை. பெரும்பாலான பணிகள் முடிந்து பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தொடர் மழை காரணமாக கண்மாய்கள், குளங்கள், வரத்து கால்வாய்களில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தண்ணீரை வெளியேற்றினால் மட்டுமே பணியை தொடர முடியும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பணியை முடிப்பதற்கு கூடுதலாக ஆறு மாத காலம் அவகாசம் கேட்டு உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விரைந்து முடிக்க கோரிக்கை
காரைக்குடியில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து காரைக்குடிக்கும் தினமும் ஏராளமானோர் பணி நிமித்தமாகவும் கல்விக்காகவும் வந்து செல்கின்றனர். காரைக்குடியில் இருந்து மதுரைக்கு 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. தவிர, வர்த்தக ரீதியாகவும் தினமும் மதுரையில் இருந்து காரைக்குடிக்கு ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை பணி நடைபெறுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பணியில் ஏற்பட்டுள்ள தொய்வால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
சாலைப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.