/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூரில் நினைவூட்டல் கூட்டம்
/
திருக்கோஷ்டியூரில் நினைவூட்டல் கூட்டம்
ADDED : அக் 19, 2025 04:19 AM
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம் கட்ட பயன்படாத அரசு மாணவர் விடுதி இடத்தை கல்வித்துறைக்கு விரைவாக மாற்றக் கோரி பழைய மாணவர்கள், பெற்றோர்கள் நினைவூட்டல் கூட்டம் நடத்தினர்.
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ராமசாமி தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சிதலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார்.
பழைய மாணவர் தனபால் பள்ளியின் செயல்பாடு, படித்த பல மாணவர்கள் சாதனைகளை நினைவூட்டினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சிவகாமி, தேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருக்கோஷ்டியூரில் 1961ல் அரசு உயர்நிலைப் துவக்கப்பட்டு 2008ல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது 670 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் போதிய கட்டட வசதி இல்லாமல் ஆசிரியர்களும்,மாணவர்களும் சிரமப்படுகின்றனர்.
இடப்பற்றாக்குறையால் புதிய வகுப்பறைக் கட்டடம் கட்ட முடியவில்லை, இதனால் பழைய மாணவர்கள், பெற்றோர்கள்,கிராமத்தினர் சார்பில் செயல்படாத அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி இடத்தை பள்ளிக்கு பயன்படுத்த கோரினர். அந்த இடத்தை கல்வித்துறைக்கு மாற்ற பல முறை கோரியும் மாற்றப்படாதாதல் தற்போது நினைவூவூட்டம் கூட்டம் நடத்தினர்.