/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு
/
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு
ADDED : அக் 19, 2025 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: பிரான்மலை துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு, விபத்து இல்லாமல் தீபாவளியை எப்படி கொண்டாடுவது, விபத்து ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை குறித்து சிங்கம்புணரி தீயணைப்பு மற்றும் மீட்பு துறை மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிலைய அலுவலர் பிரகாஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செண்பகராஜன், அர்ச்சுனன், முத்துராஜா, சசிக்குமார், கல்பன்ராஜ் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைமையாசிரியர் கஸ்தூரி, ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.