ADDED : மார் 05, 2024 05:49 AM
ஆண்டு விழா
தேவகோட்டை: ப்ளூ டால்பின் நர்சரி, தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தலைமை வகித்தார். பள்ளி நிறுவனர் ராஜன் வரவேற்றார். துணை தலைமை ஆசிரியை நபிலாபானு அறிக்கை வாசித்தார். புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி தாளாளர் ஆரோக்கியசாமி பரிசு வழங்கினார். கலைநிகழ்ச்சி நடந்தன. காஸ்மாஸ் லயன்ஸ் மண்டல தலைவர் ஐயப்பன், கவுன்சிலர் தனலட்சுமி, தாளாளர் மங்கையர்க்கரசி, பேராசிரியர் குமரப்பன், ஆசிரியர் ஜமீமா பங்கேற்றனர்.
சிவகங்கை: கற்பகம் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன் தலைமை வகித்தார். சூரக்குளம்புதுக்கோட்டை ஊராட்சி தலைவர் மலைச்சாமி முன்னிலை வகித்தார். தாளாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். இயக்குனர்கள் குமரன், சுதா கலந்துகொண்டனர். குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. பள்ளி முதல்வர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.
கண்டவராயன்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் மகிபாலன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
ஊராட்சி தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சேகர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மீனாள், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் செல்வராணி முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். தலைமையாசிரியர் வடிவேல் ஆண்டறிக்கை சமர்பித்தார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் புத்தகம் வழங்கப்பட்டது. பேச்சு, கவிதை, கட்டுரை, விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம்
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்.சிவராமன் தலைமை வகித்தார். முகாமில் 200க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கு பெற்றனர். இதில் 27 பயனாளிகளுக்கு ரூ.13.50 லட்சம் மதிப்பிலான 4 சக்கர மோட்டார் சைக்கிள், தையல் இயந்திரம், காதொலிக்கருவி, மடக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் உலகநாதன், பி.டி.ஓ., க்கள் ராஜேந்திரகுமார், ஜெகநாத சுந்தரம், லட்சுமண ராஜூ பங்கேற்றனர்.
பாராட்டு விழா
காரைக்குடி: காரைக்குடியில் வள்ளுவர் அறநிலையத்தின் சார்பில் தமிழ் செம்மல் விருது பெற்ற மெ. மெய்யாண்டவருக்கு பாராட்டு விழா நடந்தது. நல்லாசிரியர் செயம்கொண்டான் வரவேற்றார். நாச்சியப்பன் சேவியர் அந்தோணி ராஜ் முன்னிலை வகித்தனர். அழகப்பா பல்கலை., தமிழ் துறை தலைவர் ராஜாராம், சேவுகன் அண்ணாமலை கல்லூரி முன்னாள் முதல்வர் சந்திரமோகன் தமிழ் துறை தலைவர் கண்ணதாசன்,நேஷனல் கேட்டரிங் கல்லூரி தாளாளர் சையது திருக்கோஷ்டியூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டிகுமார் வாழ்த்தினர். கார்த்திகேயன் நன்றி கூறினார்.
காங்., நகர் தலைவர்கள் நியமனம்
சிவகங்கை: சிவகங்கைக்குகாங்., நகர் தலைவர்களை நியமித்து, மாநில தலைவர் செல்வபெருந்தகை உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை நகர் தலைவராக நகராட்சி கவுன்சிலர் தி.விஜயகுமார், மானாமதுரை நகராட்சி கவுன்சிலர் எஸ்.பி.,புருேஷாத்தமன், திருப்புத்துார் பேரூர் கழக தலைவராக எஸ்.சீனிவாசன், கோட்டையூர் பேரூர் கழக தலைவராக சி.டி., பழனியப்பன், தேவகோட்டை நகர் தலைவராக எஸ்.எம்., சஞ்சய், புதுவயல் பேரூர் கழக தலைவராக பி.முகமது மீரா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

