/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பனிப்பொழிவு ஏழு நாட்களுக்கு நீடிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்
/
பனிப்பொழிவு ஏழு நாட்களுக்கு நீடிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்
பனிப்பொழிவு ஏழு நாட்களுக்கு நீடிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்
பனிப்பொழிவு ஏழு நாட்களுக்கு நீடிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்
ADDED : டிச 21, 2024 06:30 AM

திருப்புவனம் : தமிழகம் முழுவதும் நேற்று முதல் ஏழு நாட்களுக்கு பனிப்பொழிவு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் திருப்புவனம் வட்டாரத்தில் நேற்று அதிகாலை முதலே பனிப்பொழிவு காணப்பட்டது.
காலை எட்டு மணி வரை காணப்பட்ட பனிப்பொழிவால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. திருப்புவனம், திருப்பாச்சேத்தி, லாடனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையை நம்பி செப்டம்பர் முதல் நெல் நடவு பணிகளை தொடங்குவது வழக்கம்.
வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதி என்பதால் நெல் தூவி நாற்று வளர்த்து ஒரு மாதம் கழித்து அதனை வயலில் நடவு செய்வார்கள், செப்டம்பர் முதல் வாரம் கிணற்று பாசன விவசாயிகள் தொடங்கி அடுத்தடுத்து மழையை நம்பி பயிரிடும் விவசாயிகள் அட்சயா, என்.எல்.ஆர்., கர்நாடக பொன்னி, கல்சர் பொன்னி, ஐ.ஆர்., 20, ஆர்.என்.ஆர்., உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் பயிரிட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவ மழை தாமதமாக பெய்ததால் தற்போது தான் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இதுவரை ஏழாயிரம் ஏக்கரில் நடவு பணிகள் நடந்துள்ளன. நேற்று காலை திடீரென இப்பகுதியில் வெம்பா பனி எனப்படும் பனி பொழிவு கடுமையாக இருந்தது. இந்த பனி நாற்றங்காலில் உள்ள நெல் பயிர்களை கருக செய்து விடும் அபாயம் உள்ளது. வெம்பா பனி பெய்தால் தொடர்ச்சியாக மழை இருக்காது என்றும் விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை உள்ளது.
எனவே தொடர்ந்து விவசாய பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் யோசனையில் உள்ளனர்.
அதிகாலை முதல் தொடர்ந்து பெய்து வரும் வெம்பா பனியினால் மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையிலும் வாகனங்கள் விளக்குகள் வெளிச்சத்தில் ஊர்ந்து சென்றன. நேற்று காலை 8:00 மணி வரை வெம்பா பனிபொழிவு இருந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

