/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விவசாயிகளுக்கு கட்டணம் குறைக்காத எம்.ஜி.ஆர்.,: பெரியகருப்பன் பேச்சு
/
விவசாயிகளுக்கு கட்டணம் குறைக்காத எம்.ஜி.ஆர்.,: பெரியகருப்பன் பேச்சு
விவசாயிகளுக்கு கட்டணம் குறைக்காத எம்.ஜி.ஆர்.,: பெரியகருப்பன் பேச்சு
விவசாயிகளுக்கு கட்டணம் குறைக்காத எம்.ஜி.ஆர்.,: பெரியகருப்பன் பேச்சு
ADDED : மார் 04, 2024 04:44 AM
மானாமதுரை : எம்.ஜி.ஆரை வள்ளல் என்றும் கொடுத்து, கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் என்றும் கூறும் அளவிற்கு அவர் விவசாயிகளுக்கு ஒரு காசு கூட கட்டண குறைப்பு செய்யவில்லை என மானாமதுரை பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
அவர் பேசியதாவது:
அண்ணாத்துரை மறைவிற்கு பின் தி.மு.க., இருக்காது அழிந்துவிடும் என்றனர். ஆனால் அன்றைய நெருக்கடியில் முதலமைச்சராக பதவியேற்ற கருணாநிதி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்து மக்கள் ஆதரவோடு சிறப்பாக ஆட்சியை 5முறை நடத்தினார்.
எம்.ஜி.ஆரை வாரி வழங்கும் வள்ளல், கொடுத்து கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்தக்காரர் என கூறுவர். ஆனால், அவரது ஆட்சியில் தான் விவசாயிகள் பயன்படுத்திய மின்மோட்டாருக்கு யூனிட்டுக்கு 8 காசு இருந்ததை குறைக்க விவசாயிகள் போராடினர். ஆனால் எம்.ஜி.ஆர்., ஒரு காசுகூட குறைக்கவில்லை. ஆனால், கருணாநிதி ஒட்டுமொத்தமாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கினார். விவசாயிகளின் 7 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தார். நாட்டில் மோடிக்கு எதிராக 28 கட்சிகளை ஒன்றிணைத்து, பிரதமர் மோடிக்கே சிம்மசொப்பனமாக முதல்வர் ஸ்டாலின் உள்ளார்.
'ஹிட்லர் வடிவில் மோடி'
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை போலீஸ் அதிகாரியாக இருந்தவர். ஆனால், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை தான் கட்சியில் சேர்க்கும் வேலையை செய்து வருகிறார். ஜனநாயக போர்வையில் சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார் மோடி. எதிர்கட்சியினரை அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை வைத்து மிரட்டி வருகிறார். விலைவாசி உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க., ரூ.6 லட்சம் கோடி கடன் வைத்து சென்றது.
அதேபோன்று பா.ஜ., நாட்டில் எத்தனை கோடி கடன் வைத்துள்ளார்கள் என்பது தேர்தல் நேரத்தில் தெரியவரும். பிரதமர் மோடி தோல்வி பயத்தில் தான், தி.மு.க.,வை அழித்தே தீருவேன் என பேசியுள்ளார். மோடி மூலம் இன்றைக்கும் ஹிட்லரை பார்க்கிறோம், என பேசினார்.

