/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் எம்.ஜி.ஆர்., நினைவு நாள்
/
சிவகங்கையில் எம்.ஜி.ஆர்., நினைவு நாள்
ADDED : டிச 25, 2024 08:18 AM
சிவகங்கை : சிவகங்கையில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அவரது சிலைக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் செல்வமணி, கருணாகரன், சேவியர்தாஸ், சிவாஜி, கோபி, ஸ்டீபன் அருள்சாமி, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் இளங்கோவன், அசோக்குமார், சரவணன், செந்தில்முருகன், ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் தமிழ்செல்வம், இளைஞர் அணி துணைத்தலைவர் வக்கீல் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அ.தி.மு.க., தொண்டர்கள் மீட்பு குழு சார்பில் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தேவகோட்டை: தேவகோட்டையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் கட்சியினர் எம்.ஜி. ஆர். படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பஸ் ஸ்டாண்ட் அருகே நகர செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், துணை தலைவர் ரமேஷ், மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர் கார்த்திகேயன், நகர ஜெ., பேரவை செயலாளர் ஆறுமுகம் பங்கேற்றனர்.
சங்கரபதிக்கோட்டை அருகே வி.ஏ.ஓ.சங்கம் சார்பில் நிறுவனர் போஸ் முன்னிலையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.