/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இறைச்சி கழிவுகளால் நாற்றமெடுக்கும் பாலாறு
/
இறைச்சி கழிவுகளால் நாற்றமெடுக்கும் பாலாறு
ADDED : மே 07, 2025 02:13 AM
சிங்கம்புணரி,: சிங்கம்புணரி அருகே இறைச்சிக் கழிவை பாலாற்றில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
இப்பேரூராட்சி அருகே வேங்கைப்பட்டி ரோட்டில் பாலாற்று பாலத்தில் சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பலர் கோழி உள்ளிட்ட இறைச்சிக் கழிவுகளை தொடர்ச்சியாக கொட்டுகின்றனர்.
அப்பகுதியாகச் செல்லும் கால்வாய் ஓரத்தில் குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் பாலாற்றங்கரை குப்பை மேடாக காட்சியளிக்கிறது. கிராம மக்கள் அவ்வழியாக செல்லும்போது துர்நாற்றம் காரணமாக மூக்கை பிடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது.
இறைச்சிக் கழிவுகளை பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் கொட்டி புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பலர் முறையாக அப்புறப்படுத்தாமல் ஆற்றில் கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் பொதுமக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.