ADDED : ஆக 07, 2025 05:14 AM

திருப்புவனம் : மினி ஆப்பிள் திருப்புவனத்தில் விற்பனை செய்யப்பட்டன.
ஆப்பிள் காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விளைவிக்கப்படுகிறது. தற்போது காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மினி ஆப்பிள்களை மதுரை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி கிராமங்களில் விற்பனை செய்து வருகின்றனர். 40 முதல் 60 கிராம் வரை எடையுள்ள மினி ஆப்பிள் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோவிற்கு 18 பழங்கள் வரை இருப்பதால் பலரும் விரும்பி வாங்குகின்றனர்.
வியாபாரி முத்து கூறுகையில்: கடைகளில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள் கிலோ 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மினி ஆப்பிள் ஒரு கிலோ 120 ரூபாய், இரண்டு கிலோ வாங்கினால் 200 ரூபாய் என விற்பனை செய்கிறோம். பெரிய ஆப்பிள் ஒரு கிலோவிற்கு அதிகபட்சமாக மூன்று தான் இருக்கும், மினி ஆப்பிள் 15 பழங்கள் வரை இருக்கும், சுவை இரண்டிலும் ஒன்று போலத்தான் இருக்கும் என்றார்.
சீசன் தற்போது தான் தொடங்கியுள்ளது. போகப்போக விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது.