/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் ரூ.110 கோடியில்பைபாஸ் ரோடு: அமைச்சர் ஆய்வு
/
சிவகங்கையில் ரூ.110 கோடியில்பைபாஸ் ரோடு: அமைச்சர் ஆய்வு
சிவகங்கையில் ரூ.110 கோடியில்பைபாஸ் ரோடு: அமைச்சர் ஆய்வு
சிவகங்கையில் ரூ.110 கோடியில்பைபாஸ் ரோடு: அமைச்சர் ஆய்வு
ADDED : மே 22, 2025 12:15 AM

சிவகங்கை: சிவகங்கை அருகே பையூரில் ரூ.110 கோடியில் நடைபெற்ற பைபாஸ் ரோடு பணிகளை அமைச்சர்கள் எ.வ.,வேலு, பெரியகருப்பன் ஆய்வு செய்தனர்.
சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் இருந்து இளையான்குடி ரோடு வரை 10.80 கி.மீ., துாரத்திற்கு பைபாஸ் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக ரூ.110 கோடியில் 7.60 கி.மீ., துாரத்திற்கு பைபாஸ் ரோடு கட்டுமான பணி தொடங்கி, முடியும் தருவாயில் உள்ளது.
இப்பணிகளை அமைச்சர் எ.வ., வேலு, பெரியகருப்பன் ஆகியோர் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க கான்ட்ராக்டர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
ஆய்வின் போது கலெக்டர் ஆஷா அஜித், தமிழரசி எம்.எல்.ஏ., நெடுஞ்சாலைத்துறை செயலர் செல்வராஜ், மாநில நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் சத்தியபிரகாஷ், கண்காணிப்பு பொறியாளர் ஆர்.கே., ரமேஷ், சிவகங்கை கோட்ட பொறியாளர் எஸ்.கே., சந்திரன், உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராகிம், உதவி பொறியாளர் ரமேஷ்குமார் பங்கேற்றனர்.