/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தி.மு.க.,வை எதிர்த்தவர்கள் இப்போது தி.மு.க.,வில் எதிர்க்கட்சி தலைவராக தொடர பழனிசாமி திட்டம் அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

ADDED : செப் 23, 2025 04:16 AM
திருப்புத்துார்: திருப்புத்துாரில் நடந்த தி.மு.க., ஓரணியில் தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு கூட்டத்தில் 'தி.மு.க.,வை எதிர்த்தவர்கள் பலரும் இப்போது தி.மு.க.,வில் தான் உள்ளனர். பழனிசாமி கட்சியை தக்க வைத்துக் கொள்ள 2026ல் எதிர்க்கட்சி தலைவராக வரத்தான் திட்டமிட்டுள்ளார்' என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
அவர் பேசியதாவது:
கமல்ஹாசன் பல விருது பெற்ற நடிகர். அவரைப் போன்றவர்கள் கட்சி ஆரம்பித்து முழுமை யாக வெற்றி பெற முடிய வில்லை என்றாலும் முதல்வர் அரவணைத்து ராஜயசபா எம்.பி., ஆக்கினார்.
திருப்புத்துார் தொகுதியில் தி.மு.க., வேட்பாள ரான என்னை எதிர்த்து 2முறை நின்ற மருது அழகுராஜை கூட நமது முதல்வர் அரவணைத்து கட்சியில் சேர்த்துள்ளார். அவர் மட்டுமல்ல தமிழரசி எம்.எல்.ஏ.வுக்கு எதிராக போட்டியிட்ட மாரியப்பனும் தி.மு.க.,வில் தான் உள்ளார்.
தி.மு.க.,வை எதிர்த்தவர்கள் பலரும் இப்போது தி.மு.க.,வில் தான் உள்ள னர். அ.தி.மு.க.,வில் பன்னீர்செல்வம், தினகரன் அனைவரும் இருந்த நிலையில் கூட்டணி பலம் இருந்தும் ஜெயிக்க முடியாத பழனிசாமி, 2026ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து முதல்வராவோம் என்று நினைக்கவில்லை. அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தான் எதிர்பார்க்கிறார். கட்சியை தக்க வைத்துக் கொள்ளதான் பழனிசாமி திட்டமிட்டு உள்ளார்.
இவ்வாறு பேசினார்.
முன்னாள் அமைச்சர்கள் தென்னவன், தமிழரசி எம்.எல்.ஏ., இயக்குநர் கரு.பழனியப்பன், மாவட்டத் துணைச் செயலர் சேங்கைமாறன் உள்ளிட்ட பலர் பேசினர்.