/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறுபான்மையினர் திட்டங்கள் சிறந்த மாநிலம் தமிழகம் ஆணைய தலைவர் பேட்டி
/
சிறுபான்மையினர் திட்டங்கள் சிறந்த மாநிலம் தமிழகம் ஆணைய தலைவர் பேட்டி
சிறுபான்மையினர் திட்டங்கள் சிறந்த மாநிலம் தமிழகம் ஆணைய தலைவர் பேட்டி
சிறுபான்மையினர் திட்டங்கள் சிறந்த மாநிலம் தமிழகம் ஆணைய தலைவர் பேட்டி
ADDED : அக் 14, 2024 04:35 AM
சிவகங்கை: ''சிறுபான்மையினருக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில் சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது,'' என, சிவகங்கையில் மாநில சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் ஜோஅருண் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில் சிறுபான்மையின மக்களுக்காக அரசு எவ்வித திட்டங்களை வகுத்துள்ளது. அவர்கள் உரிமையை காக்கவும், திட்டங்களை செயல்படுத்துவதின் மூலம் அவர்கள் முன்னேற்றம் கண்டுள்ளார்களா எனவும் ஆய்வு செய்கிறோம். இதற்காக ரூ.34 லட்சம் செலவிடப்படுகிறது. ஐந்து சமூக அறிவியல் அறிஞர்களை நியமித்துள்ளோம்.
சிறுபான்மையினருக்கான அரசின் திட்டம், உரிமை, பாதுகாப்பு, உதவி தொகை, தொழில் உதவி மூலம் எப்படி வளர்ந்துள்ளார்கள் என ஆய்வு நடக்கிறது. சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஆய்வு செய்துள்ளோம். தொடர்ந்து தென்மாவட்டங்களில் ஆய்வு செய்து சென்னையில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அரசின் சிறப்புகள் குறித்து கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடத்தி, மாநில அளவில் இருவரை தேர்வு செய்வோம். அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசளிக்க உள்ளார். ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் அனைவரும் அமைதியான வாழ்வு வாழ, இந்த அரசு என்ன செய்யவேண்டும் என்ற பரிந்துரையை வழங்க உள்ளோம் என்றார்.