/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு 23 மாத ஊதியம் வழங்காமல் நிலுவை காத்திருப்பு போராட்டம்

ADDED : டிச 03, 2024 05:39 AM
சிவகங்கை: காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 23 மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து டிச.11 முதல் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவெடுத்துள்ளனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் புரட்சித்தம்பி தலைமையில் நடந்தது.
மாநில துணைத் தலைவர் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சகாயதைனேஸ் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.
கூட்டத்தில் காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 23 மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து கடந்த செப்.19ம் தேதி காளையார்கோவில் வட்டார கல்வி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் தலையிட்ட வருவாய்த்துறை செப்.30ம் தேதி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் விரிவான அறிக்கையை மாவட்ட கலெக்டரிடம் வழங்குவதாகவும் அவர் மூலம் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என முடிவு செய்யப்பட்டது.முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்து 2 மாதத்திற்கு மேலாகியும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கும் வரை டிச.11 முதல் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.