/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அவலம்: வாரச்சந்தையில் மழைநீர் வடிகால் இல்லை: பள்ளத்துாரில் தண்ணீரில் மிதந்த காய்கறிகள்

ADDED : ஜன 16, 2025 05:06 AM

பள்ளத்துார் பேரூராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். பேரூராட்சி சார்பில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிய சந்தை கட்டடம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் இச்சந்தைக்கு பள்ளத்துார் மட்டுமின்றி கொத்தமங்கலம், புதுவயல், மணச்சை, வடகுடி, சூரக்குடி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த சந்தையில் வியாபாரிகளுக்கு போதுமான கடைகள் இல்லை. மேலும் சந்தையில் இருந்து மழை நீர் வெளியே செல்வதற்கு போதிய வரத்து கால்வாய் இல்லை. வியாபாரிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். பொது மக்களும் சந்தைக்குள் நடப்பதற்கே அச்சப்படுகின்றனர்.
ராஜேந்திரன் கூறுகையில்: பள்ளத்துார் சந்தைக்கு வாரந்தோறும் வருகிறோம். புதிய கட்டடம் கட்டி மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் பயனில்லாத நிலை உருவாகியுள்ளது. மழை காலங்களில், மழைநீர், சகதியால் சிரமம் ஏற்படுகிறது. முறையாக வரத்து கால்வாய் அமைப்பதோடு, கூடுதல் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரூராட்சி தலைவி சாந்தி கூறுகையில்: புதிய சந்தை கட்டடம் திட்டமிடப்படாமல் கட்டியதால் மழை நீர் வெளியேற வழி இல்லை. சகதியால் வியாபாரிகள் அவதி அடைவது குறித்து தொடர்ந்து புகார் வருகிறது. இதனை மேம்படுத்தி தர விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.