/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அவலம் ...:அங்கன்வாடி மையத்தில் தண்ணீர் இல்லை: கட்டடமும் சேதமடைந்ததால் வர தயக்கம்
/
அவலம் ...:அங்கன்வாடி மையத்தில் தண்ணீர் இல்லை: கட்டடமும் சேதமடைந்ததால் வர தயக்கம்
அவலம் ...:அங்கன்வாடி மையத்தில் தண்ணீர் இல்லை: கட்டடமும் சேதமடைந்ததால் வர தயக்கம்
அவலம் ...:அங்கன்வாடி மையத்தில் தண்ணீர் இல்லை: கட்டடமும் சேதமடைந்ததால் வர தயக்கம்
ADDED : ஆக 14, 2025 02:32 AM

ஊராட்சி ஒன்றியங்களில் கிராமங்கள் தோறும் அங்கன்வாடி மையங்கள் கட்டி வருகின்றனர். அங்கன் வாடி மையம் என மக்கள் அறிந்து கொள்ள வெளிப்புற சுவர்களில் விலங்குகள், பறவைகள், பூக்கள் என வண்ண படங்கள் வரைந்து விடுகின்றனர். ஆனால் குடிநீர், மின்சார இணைப்பு வழங்குவதில் காலதாமதம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த எழுவங்கோட்டை ஊராட்சியில் கோட்டவயலில் உள்ள அங்கன்வாடி மையம் சிறிய அளவிலான பழைய கட்டடத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. நவீன வசதிகளுடன் மையம் இங்கு இல்லை. 10 குழந்தைகள் விளையாட வசதியும் இல்லை. ஆனால் குழந்தைகளுக்கு புதிய விளையாட்டு உபகரணங்கள் வழங்கி உள்ளனர்.
அங்கன்வாடி மையம் கட்டடம் ஆபத்தான நிலையில் உள்ளது. 2022--23 ஆம் ஆண்டில் ரூ ஒரு லட்சத்து 14 ஆயிரத்தில் மராமத்து பணி செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய கட்டடம் என்பதால் மேலே கான்கிரீட் கூரை பூச்சு பெயர்ந்து சேதமடைந்துள்ளது. எந்த நேரத்திலும் பெயர்ந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. கட்டடத்தின் முகப்பு சுவரே பெயின்ட் உதிர்ந்து நீண்ட விரிசல் ஏற்பட்டு உள்ளது. மின் இணைப்புகளும் மோசமாக இருக்கிறது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தண்ணீர் வசதியே இல்லை. மையத்தின் சமையல் அறையில் தொட்டியுடன் கூடிய குடிநீர் இணைப்பு இருக்கிறது. இருந்தும் பயனின்றி தண்ணீரே வரவில்லையாம். பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் கவனிக்கவில்லை. மைய பொறுப்பாளர் ஒவ்வொரு வீடுகளிலும் தண்ணீர் பிடித்து வருகிறார். தண்ணீர் வசதி இல்லாமை, கட்டடம் ஆபத்தான நிலை காரணமாக 11 குழந்தைகள் பதிவில் இருந்தும் மூன்று அல்லது நான்கு குழந்தைகள் தான் வருகின்றனர். குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.