UPDATED : அக் 28, 2026 11:39 PM
ADDED : அக் 28, 2026 06:14 PM

அ நிறம் | அளவு
காரைக்குடி: காரைக்குடியில் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால், நிலத்தடி நீர் ஆதாரமானபொதுமக்கள் பயன்படுத்தி வந்த ஊருணிகள் புதர் மண்டி கிடக்கிறது.
காரைக்குடி மாநகராட்சி 34 வது வார்டில் பாரம்பரிய பாப்பா ஊருணி உள்ளது. ஊருணியின் நடுவே கிணறும் அமைந்துள்ளது. ஊருணியில் உள்ள தண்ணீரை அப்பகுதி மக்கள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். மேலும் மழைக்காலங்களில் ஊருணி நிரம்புவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு காரணமாக வரத்து கால்வாய் பலவும் மாயமானது. இதனால், ஊருணிக்கு வரக்கூடிய தண்ணீர் வரத்து தடைபட்டது. தண்ணீரின்றி ஊருணி புதர் மண்டி கிடப்பதால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
