/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காணாமல் போன நிழற்குடை: தவிக்கும் பயணிகள்
/
காணாமல் போன நிழற்குடை: தவிக்கும் பயணிகள்
ADDED : ஜூன் 14, 2025 11:35 PM

காரைக்குடி : காரைக்குடியில் நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி நடந்தது. வாட்டர் டேங்க் பஸ் ஸ்டாப்பில் இருந்து தினமும், பள்ளி கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்குச் செல்வோர், வெளியூர் பயணிகள் சென்று வருகின்றனர். கடந்த ஆண்டு சாலை அகலப்படுத்தும் பணியின்போது, இங்கிருந்த பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது. ஓராண்டாகியும் மீண்டும் நிழற்குடை கட்டப்படவில்லை.
பயணிகள் வெயில், மழையில் நின்றபடி பஸ்சுக்கு காத்திருக்கும் அவலம் நிலவுகிறது. தவிர, சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்தும் ஏற்படுகிறது.
எனவே மீண்டும் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்