/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அங்கன்வாடி குழந்தைகளுக்கு விடுமுறை விடுவதில் குளறுபடி; மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு

ADDED : நவ 23, 2024 06:29 AM
சிவகங்கை; மழை,வெள்ள காலத்தில் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் உள்ள குளறுபடியை கலெக்டர் நீக்க வேண்டும் என ஐ.சி.டி.எஸ்.,ஊழியர்,உதவியாளர் சங்க மாநில பொது செயலாளர் ஆர்.வாசுகி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு மழை, புயல், வெள்ள, பேரிடர் காலங்களில் பள்ளிகளுக்கு கலெக்டர் விடுமுறை அறிவிக்கும் போது,அங்கன்வாடி மையங்களுக்கும் அது பொருந்தும் என அரசு உத்தரவில் உள்ளது.
ஆனால், தற்போது சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட கலெக்டர்கள் மழை காலங்களில் விடுமுறை அறிவிக்காமல், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என உத்தர விட்டுள்ளனர்.
இதனால் மழை காலங்களில் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை குறித்து எவ்வித அறிவிப்பும் இன்றி, அங்கன்வாடி மையங்களுக்கு வரும் 2 முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மாவட்ட திட்ட அலுவலரிடம் கேட்டால், கலெக்டர் இது குறித்து எந்தவித தகவலும் சொல்லவில்லை என கூறுகிறார்.
மேலும் நவ., 25 முதல் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் அங்கன்வாடி மைய குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு மழை காலங்களில் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை விடுவதற்கான உரிய உத்தரவுகளை கலெக்டர் பிறப்பிக்க வேண்டும்,என்றார்.