/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வடமாநில ரயில்கள் நின்று செல்ல எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
/
வடமாநில ரயில்கள் நின்று செல்ல எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
வடமாநில ரயில்கள் நின்று செல்ல எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
வடமாநில ரயில்கள் நின்று செல்ல எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : நவ 30, 2024 06:34 AM
சிவகங்கை; சிவகங்கையில் வடமாநிலம் செல்லும் ரயில் உட்பட அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என செந்தில்நாதன் எம்.எல்.ஏ., ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.,சிங்கிடம் வலியுறுத்தினார்.
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.,சிங் நேற்று காலை 11:00 மணிக்கு சிறப்பு ரயில் மூலம் சிவகங்கை வந்தார்.
ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் தங்கும் விடுதி, கழிப்பிடம், மேற்கூரை, பிளாட்பாரத்தில் தேவையான வசதி குறித்து ஆய்வு செய்தார்.
அவருடன் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீவத்ஸவா உள்ளிட்ட அதிகாரிகள் வந்திருந்தனர்.
சிவகங்கை எம்.எல்.ஏ., செந்தில்நாதன் (அ.தி.மு.க.,), நகராட்சி தலைவர் துரை ஆனந்த், நகர் பொது மக்கள் சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன.
மூன்றுவிதமான மனுக்களிலும், செங்கோட்டை --- தாம்பரம், ராமேஸ்வரம் - - வாரணாசி, அயோத்தியா, அஜ்மீர், ஹூப்ளி, எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ஆகிய ரயில்கள் சிவகங்கையில் நின்று செல்ல வேண்டும் என இருந்தது.
அதே போன்று சிவகங்கை வழியாக சென்னை --- ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும்.
ரயில்களில் முன்பதிவு செய்வதற்கு ஏதுவாக மீண்டும் இங்கு ரிசர்வேஷன் கவுன்டர் அமைக்க வேண்டும்.
திருச்சி --- ராமேஸ்வரம் இடையே இரட்டை ரயில் தண்டவாளம் அமைக்கும் திட்டத்தை துவக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
சிவகங்கை நிலைய கண்காணிப்பாளர்கள் ஜி.முருகன், பிரியா கவுர், லயன்ஸ் தலைவர் விஸ்வநாதன், காங்., சிறுபான்மை பிரிவு சையது, காங்., முன்னாள் கவுன்சிலர் சண்முகராஜன், கவுன்சிலர் அயூப்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

