/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாரச்சந்தையில் அலைபேசி திருட்டு போலீஸ் கண்காணிப்பு தேவை
/
வாரச்சந்தையில் அலைபேசி திருட்டு போலீஸ் கண்காணிப்பு தேவை
வாரச்சந்தையில் அலைபேசி திருட்டு போலீஸ் கண்காணிப்பு தேவை
வாரச்சந்தையில் அலைபேசி திருட்டு போலீஸ் கண்காணிப்பு தேவை
ADDED : செப் 28, 2024 06:28 AM
மானாமதுரை : மானாமதுரை வாரச்சந்தையில் 3 பேரிடம் அலைபேசி,வியாபாரிகளிடம் பணம், டூவீலர் திருட்டு நடந்துள்ளதால் வாரச்ச்சந்தையன்று போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டுமென வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
மானாமதுரையில் வியாழக்கிழமை நடைபெறும் வாரச்சந்தையில் சிவகங்கை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, இளையான்குடி, பரமக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து பொருட்களை வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த பொருட்களை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர்.
வாரச்சந்தையில் கூட்டம் அதிகமாக இருக்கும் மாலை நேரங்களில் திருடர்கள் உள்ளே நுழைந்து மக்களோடு மக்களாக கலந்து அலைபேசிகள் மற்றும் பணம் போன்றவற்றை திருடுகின்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற வாரச்சந்தையில் பொருட்களை வாங்குவதற்காக வந்த 3 பேரிடம் அலைபேசிகளையும்,வியாபாரிகளிடம் பணத்தையும் மற்றும் வாரச்சந்தைக்கு வந்த ஒருவரது டூவீலரையும் திருடர்கள் திருடி சென்றனர்.
இதுகுறித்து அவர்கள் மானாமதுரை போலீசில் புகார் கொடுத்துள்ளனர். மானாமதுரை போலீசார் வாரச்சந்தையன்று ரோந்து சென்று திருடர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.