/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பணம் இரட்டிப்பு மோசடி * சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
/
பணம் இரட்டிப்பு மோசடி * சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
பணம் இரட்டிப்பு மோசடி * சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
பணம் இரட்டிப்பு மோசடி * சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
ADDED : மே 30, 2025 01:27 AM
சிவகங்கை:ஆன்லைனில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி காரைக்குடி சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ.45.57 லட்சம் மோசடி செய்தவர் குறித்து சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம், பள்ளத்துார் கருப்பையா மகன் கண்ணன் 31. இவர் கோயம்புத்துாரில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தார். பணியை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்துவிட்டார். ஆன்லைனில் தொழில் செய்யும் நோக்கில், இன்ஸ்டாகிராமில் வந்த இணைப்பை தொடர்பு கொண்டுள்ளார். இவரது அலைபேசி எண்ணிற்கு வாட்ஸ் அப் காலில் வந்த நபர், தன்னை பங்கு வர்த்தக ஆலோசகர் என அறிமுகம் செய்தார்.
பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக்கி தருவதாக உறுதி அளித்தார். இதை நம்பி அவர் அளித்த 7 வங்கி கணக்கில் 2025 பிப்., 18 முதல் ஏப்., 3 ம் தேதி வரை 22 முறை ரூ.45.57 லட்சம் செலுத்தியுள்ளார். முதல் முதலாக அவருக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் பணத்தை இரட்டிப்பாக்கி போட்டுள்ளனர். அதற்கு பின் ரூ.45.57 லட்சத்தை பெற்று மோசடி செய்து விட்டனர். இது குறித்து சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் கண்ணன் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி விசாரித்து வருகிறார்.