/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தண்ணீருக்காக வெளியேறும் விலங்குகள் கண்காணிப்பு
/
தண்ணீருக்காக வெளியேறும் விலங்குகள் கண்காணிப்பு
ADDED : ஏப் 05, 2025 05:41 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் பகுதி காடுகளில் வன உயிரினங்களுக்கு தாகம் தீர்க்க வனத்துறையினர் அமைத்துள்ள நீர்த் தொட்டி, மண் குளங்களை வன உயிரினங்கள் பயன்படுத்துவதை கண்காணித்து வருகின்றனர்.
திருப்புத்தூர் வனப்பகுதியில் பரவலாக ஆயிரக்கணக்கான புள்ளிமான்கள், மயில்கள் வசிக்கின்றன. வேலங்குடி வனப்பகுதியில் காட்டுப்பூனை, மரநாய், புனுகு பூனை, காட்டெருமை வசிக்கின்றன. புதிய வகை பைதான் கட்டு வீரியன் பாம்புகளும் உள்ளன.
பொதுவாக கோடை காலம் துவங்கும் போது வனப்பகுதியில் நீர் வறண்டு வன உயிரினங்கள் விவசாய கிணறுகள், குடியிருப்புகளை நோக்கி படையெடுக்கும். அப்போது விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றன. அதை தவிர்க்கும் விதமாக வனத்துறையினர் வனப்பகுதிகளில் நீர்நிலைகளை உருவாக்கி வைத்துள்ளனர்.
திருப்புத்தூர் சரக வனப்பகுதியில் இளங்குடி, கம்பனூர், கரிசல்பட்டி, வேலங்குடி, எஸ்.வி.மங்கலம், மருதங்குடி, பிரான்மலை, ஏரியூர், மதகுபட்டி போன்ற இடங்களில் உள்ள குளங்கள், தொட்டிகளை பராமரித்து வருகின்றனர். புதிதாக ரூ. 6லட்சத்தில் வேலங்குடியில் சோலார் மின்வசதியுடன் 2 இடங்களில் தொட்டி கட்டியுள்ளனர்.
அவற்றில் வன உயிரினங்கள் நீர் அருந்துவதை கேமரா மூலம் வனத்துறையினர் பதிவு செய்துள்ளனர். நீர்நிலைகளை அமைக்க வேண்டிய இடங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். மாவட்ட வன அலுவலர் பிரபா, உதவி மாவட்ட வன அலுவலர் மலர்கண்டன், வனச்சரகஅலுவலர் கார்த்திகேயன், வனவர் பிரவீன் ராஜ் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.