/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மழை வெள்ளம் பாதித்த காரைக்குடியில் கண்காணிப்பு அலுவலர் விசாரணை
/
மழை வெள்ளம் பாதித்த காரைக்குடியில் கண்காணிப்பு அலுவலர் விசாரணை
மழை வெள்ளம் பாதித்த காரைக்குடியில் கண்காணிப்பு அலுவலர் விசாரணை
மழை வெள்ளம் பாதித்த காரைக்குடியில் கண்காணிப்பு அலுவலர் விசாரணை
ADDED : அக் 16, 2024 04:05 AM

சிவகங்கை : மேலடுக்கு சுழற்சி காரணமாக காரைக்குடியில் அக்., 11 ல் பலத்த மழை பெய்ததால், மழை நீர் கரைபுரண்டு ஓடியது. வீடுகள், வர்த்தக நிறுவனங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அக்., 11 அன்று இரவு மாவட்டத்திலயே அதிகபட்சமாக 154 மி.மீ., மழை பதிவானது. அன்றைய தினம் மதியம் 3:30 மணிக்கு துவங்கிய மழை இரவு முழுவதும் நீடித்தது.
இதனால், அழகப்பா பல்கலை வளாகம், செஞ்சை, கழனிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. குறிப்பாக செக்காலை ரோட்டில் இருந்து கண்ணன் பஜாருக்குள் மழை நீர் புகுந்ததால், கடைகள் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு பாதிப்பு ஏற்பட்டது.
பெரும்பாலான மழை நீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால், மழை நீர் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகுந்தது. குறிப்பாக அப்பகுதி இளைஞர்கள், தொண்டு அமைப்பினர் வீட்டிற்குள் முடங்கியவர்களை மீட்டு வந்தனர்.
காரைக்குடியில் அக்., 11க்கு பின் தொடர்ந்து அக்., 12 ல் 5 மி.மீ., அக்., 13 ல் 26, அக்., 14 ல் 13, அக்., 15 ல் 19 மி.மீ., வரை மழை பெய்தது.
இதனால், காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் மக்கள் தவிப்பிற்கு உள்ளாகினர். மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மீன்வளத்துறை இயக்குனருமான கஜலட்சுமி, கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நேற்று காரைக்குடி பகுதியில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளை பார்வையிட்டனர்.
மேலும் மழை நீரால் பாதிக்கப்பட்ட நீர்நிலைகள், வீடுகள், நெல்வயல்களை பார்வையிட்டனர். கண்காணிப்பு அலுவலர் அரசுக்கு அறிக்கை வழங்க உள்ளார்.
அதற்கு பின் மேலும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
இக்குழுவினர் குறிப்பாக பிள்ளையார்பட்டி நாகனேந்தல் கண்மாய், காரைக்குடி அருகே பலவான்குடியில் மழை நீர் மூழ்கிய நெல்வயல், காரைக்குடி சங்குசமுத்திர கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.
ஆய்வின் போது தேவகோட்டை சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி, மாநகராட்சி கமிஷனர் சித்ரா, கலெக்டர் பி.ஏ., (விவசாயம்) சுந்தரமகாலிங்கம், தாசில்தார்கள் காரைக்குடி ராஜா, திருப்புத்துார் மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.