/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூட்டம் கூட்டமாக வீடுகளில் சுற்றித் திரியும் குரங்குகள்
/
கூட்டம் கூட்டமாக வீடுகளில் சுற்றித் திரியும் குரங்குகள்
கூட்டம் கூட்டமாக வீடுகளில் சுற்றித் திரியும் குரங்குகள்
கூட்டம் கூட்டமாக வீடுகளில் சுற்றித் திரியும் குரங்குகள்
ADDED : அக் 06, 2024 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி, : சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட முத்துப்பட்டினத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
கடந்த சில மாதங்களாக குரங்குகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன.
தவிர, வீடுகள் கடைகளில் உணவுப் பொருட்களை குரங்குகள் தூக்கிச் செல்கின்றன.
மேலும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளையும் சாலையில் நடந்து செல்லும் பொது மக்களையும் குரங்குகள் அச்சுறுத்தி வருகின்றன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சம் அடைந்துள்ளனர். குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.