/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் மதிப்பீடு தேர்வு
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் மதிப்பீடு தேர்வு
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் மதிப்பீடு தேர்வு
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் மதிப்பீடு தேர்வு
ADDED : அக் 27, 2025 03:23 AM
சிவகங்கை: அரசு பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் மதிப்பீடு தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த மாதந்தோறும் பல பாடங்களில் மதிப்பீடு தேர்வு நடத்தப்பட உள்ளது. ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொது அறிவு பாடங்களில் உயர் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் கேள்விகள் இருக்கும்.
மாதந்தோறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தயாரித்து, தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த வினாக்களில் இருந்து தேர்வுகள் நடத்தப்படும்.
இதன் மூலம் போட்டி தேர்வு, திறனறிவு, வேலைவாய்ப்பு திறன் தேர்வுகளை தயக்கமின்றி மாணவர்கள் சந்திக்க வழி வகை செய்யும் நோக்கில் இத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
ஆங்கிலத்தில் வாசித்தல், இலக்கணம், கணிதம், அறிவியலுக்கு சிந்தித்து பதில் அளிக்கும் திறன் சார்ந்த வினாக்கள் கேட்கப்படும்.