/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பட்டா கிடைத்த சந்தோஷத்தில் கலெக்டருக்கு பாசி மாலை
/
பட்டா கிடைத்த சந்தோஷத்தில் கலெக்டருக்கு பாசி மாலை
ADDED : மார் 07, 2024 05:41 AM

காரைக்குடி: காரைக்குடியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
405 பயனாளிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் பட்டா வழங்கினார். இதில், கலெக்டர் ஆஷா அஜித், மாங்குடி எம்எல்ஏ., ஆர்டிஓ., பால்துரை, தாசில்தார் தங்கமணி கோட்டையூர் சேர்மன் கார்த்திக் சோலை, பள்ளத்துார் சேர்மன் சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில், 106 நரிக்குறவர் குடும்பத்திற்கு பட்டா வழங்கப்பட்டது. பட்டா கிடைத்த மகிழ்ச்சியில்கலெக்டர் ஆஷா அஜித்திற்கு நரிக்குறவர் இனப்பெண்கள் பாசி மாலை அணிவித்தும் கைகுலுக்கியும் செல்பி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 30 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டா வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

