/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தாய் சேய் நல மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் அவதி
/
தாய் சேய் நல மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் அவதி
தாய் சேய் நல மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் அவதி
தாய் சேய் நல மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் அவதி
ADDED : அக் 31, 2025 12:30 AM
சிவகங்கை:  சிவகங்கை  தாய் சேய் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு டாக்டர் இல்லாததால் சிகிச்சைக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை  ராமச்சந்திர பூங்கா அருகே உள்ளது தாய் சேய் நல மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு 24 மணிநேரமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மருத்துவமனையில் காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை தான் டாக்டர்கள் பணியில் உள்ளனர். மற்ற நேரங்களில் டாக்டர்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இங்கு முதலுதவி, மகப்பேறு, தாய் சேய் மருத்துவம், பொதுமருத்துவம், இ.சி.ஜி., ரத்தப்பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இங்கு 2 டாக்டர்கள், 3 செவிலியர்கள், 2 மருந்தாளுனர் பணிபுரிகின்றனர். இதில் ஒரு டாக்டர் மேல் படிப்பிற்கு சென்று விட்டார். ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். அவரும் நேற்று விடுமுறை என்பதால் சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவமனையில் இல்லை.
இதனால் நேற்று காலை முதல் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதிப்பட்டுள்ளனர். பணியில் இருந்த செவிலியர்களிடம் மருந்து மாத்திரை வாங்கி சென்றுள்ளனர்.
நகரில் உள்ள இந்த அரசு மருத்துவமனையில் சராசரியாக ஒரு நாளைக்கு 150க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு டாக்டர் விடுமுறை எடுத்தால் மாற்று பணிக்கு டாக்டர்களை பணி அமர்த்த மாவட்ட மருத்துவ துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் வலியுறுத்துகின்றனர்.

