/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெடுஞ்சாலையில் குப்பைக்கு தீ; புகையால் வாகன ஓட்டிகள் அவதி
/
நெடுஞ்சாலையில் குப்பைக்கு தீ; புகையால் வாகன ஓட்டிகள் அவதி
நெடுஞ்சாலையில் குப்பைக்கு தீ; புகையால் வாகன ஓட்டிகள் அவதி
நெடுஞ்சாலையில் குப்பைக்கு தீ; புகையால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : பிப் 23, 2024 05:10 AM

சிவகங்கை : சிவகங்கை நகராட்சியில் நெடுஞ்சாலைகளில் குப்பைக்கு தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் புகையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
சிவகங்கை மருத்துவ கல்லுாரி அருகே தஞ்சாவூர் மானாமதுரை தேசிய சுற்றுச்சாலையில் சிவகங்கை நகராட்சியில் சேகரமாகும் குப்பபை கொட்டப்படுகிறது.
இங்கு கொட்டப்படும் குப்பை அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகிறது. இந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
தீயில் உருவாகும் புகையால் மருத்துவக் கல்லுாரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. சுற்றுச்சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளும் தங்களது வாகனங்களை இயக்குவதற்கு சிரமப்படுகின்றனர்.
மருது கம்யூ., நகர செயலாளர் கூறுகையில், சிவகங்கை நகராட்சியில் குப்பை பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ளது. இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், மருத்துவக் கல்லுாரி நிர்வாகத்திடமும், நகராட்சி நிர்வாகத்திலும் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
சிவகங்கை நகராட்சியில் ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பதை நிறுத்தா விட்டால் கம்யூ., கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.