/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சர்வீஸ் ரோட்டை மறைக்கும் மரங்களால் வாகன ஓட்டிகள் அவதி
/
சர்வீஸ் ரோட்டை மறைக்கும் மரங்களால் வாகன ஓட்டிகள் அவதி
சர்வீஸ் ரோட்டை மறைக்கும் மரங்களால் வாகன ஓட்டிகள் அவதி
சர்வீஸ் ரோட்டை மறைக்கும் மரங்களால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூலை 05, 2025 12:38 AM
மானாமதுரை; மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டில் இருந்து சிவகங்கை செல்லும் சர்வீஸ்ரோட்டில் வளர்ந்துள்ள மரங்களால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டில் இருந்து சிவகங்கை செல்லும் சர்வீஸ் ரோட்டில் டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்து பைபாஸ் ரயில்வே கேட் வரை மரங்கள் ரோட்டை ஒட்டி வளர்ந்துள்ளது. சில இடங்களில் இம்மரங்களின் கிளை ரோட்டை மறைத்து வருகிறது.
பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல சிரமப்பட்டு வருகின்றன. தற்போது காற்று பலமாக வீசத் துவங்கியுள்ள நிலையில் வாகனங்கள் செல்லும் போது காற்றின் வேகம் தாங்காமல் மரங்கள் முறிந்து வாகனங்களில் விழுந்தால் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆகவே நான்கு வழிச்சாலை ஆணைய அதிகாரிகள் சர்வீஸ் ரோட்டின் ஓரமாக உள்ள மர கிளைகளை அகற்ற வேண்டும்.