/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாகிஸ்தானை திருப்திப்படுத்த இந்தியா மீது 50 சதவீத வரி எம்.பி., கார்த்தி கருத்து
/
பாகிஸ்தானை திருப்திப்படுத்த இந்தியா மீது 50 சதவீத வரி எம்.பி., கார்த்தி கருத்து
பாகிஸ்தானை திருப்திப்படுத்த இந்தியா மீது 50 சதவீத வரி எம்.பி., கார்த்தி கருத்து
பாகிஸ்தானை திருப்திப்படுத்த இந்தியா மீது 50 சதவீத வரி எம்.பி., கார்த்தி கருத்து
ADDED : செப் 05, 2025 12:39 AM
சிவகங்கை:''பாகிஸ்தானுடன், அமெரிக்கா நெருங்கிய தொடர்பில் இருக்கிறது. அவர்களை திருப்திபடுத்தவே அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்துள்ளார் ,'' என சிவகங்கையில் காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஜி.எஸ்.டி., வரி குறைப்பை வரவேற்கிறேன். வரி குறைப்பால் பொருளின் விலை குறைந்து, அதிகளவில் வாங்க துவங்குவதின் மூலம் பொருளாதாரம் இன்னும் வளரும்.
அமெரிக்கா - பாகிஸ்தானுடன் உறவு வைத்துள்ளனர். இதனால் பாகிஸ்தானை திருப்தி படுத்த தான் இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதிப்பை புகுத்தியது. ஒரு மாநில முதல்வர் ஆண்டுக்கு 3 முறையாவது வெளிநாடு சென்று, தொழில் முதலீட்டை வரவேற்க வேண்டும்.
அ.தி.மு.க., ஆட்சியில் எந்தளவிற்கு தொழில் முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளனர் என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அந்த வெள்ளை அறிக்கையுடன் தற்போது தி.மு.க., கொண்டு வந்துள்ள தொழில் முதலீடு வந்தது குறித்து தெரிய வரும்.
பா.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., இருக்கும் வரை, எந்த கட்சியுடன் எந்த கட்சி கூட்டணி வைத்தாலும், தோல்வியை தான் தழுவும். கச்சத்தீவை தாரை வார்த்து விட்டார்கள் என த.வெ.க., தலைவர் விஜய் மேடையில் பேசுவதற்கு முன் என்ன காரணத்திற்காக இலங்கையிடம் கொடுத்தார்கள் என்பதை படித்து பார்த்திருக்க வேண்டும்.
நாட்டில் நதிநீரை இணைப்பு என்பது முடியாத காரியம். இதனால் சட்ட சிக்கல் அதிகம் ஏற்படும். தெரு நாய்களை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் நாய் தொல்லை தொடரத்தான் செய்யும். இவ்வாறு கூறினார்.