/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாதிப்பு பழுதான வாகனங்களால் துாய்மை பணி அலட்சியத்தில் பேரூராட்சி அதிகாரிகள்
/
பாதிப்பு பழுதான வாகனங்களால் துாய்மை பணி அலட்சியத்தில் பேரூராட்சி அதிகாரிகள்
பாதிப்பு பழுதான வாகனங்களால் துாய்மை பணி அலட்சியத்தில் பேரூராட்சி அதிகாரிகள்
பாதிப்பு பழுதான வாகனங்களால் துாய்மை பணி அலட்சியத்தில் பேரூராட்சி அதிகாரிகள்
ADDED : ஜூன் 05, 2025 01:14 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் குப்பை அள்ள பயன்படும் வாகனங்கள் பழுதடைந்து கிடப்பதால் நகரில் முழுமையாக குப்பையை அகற்ற முடியாமல் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது.
திருப்புவனத்தில் 18 வார்டுகளில் தினசரி நான்கு முதல் ஆறு டன் குப்பை வரை சேகரிக்கப்படுகின்றன. திருமணம், திருவிழா உள்ளிட்ட விசேஷ நாட்களில் இது இருமடங்காக உயரும். திருப்புவனத்தில் குப்பை சேகரிக்க இரண்டு டிராக்டர்கள், நான்கு மினி வேன்கள்,18 பேட்டரி வாகனங்கள் உள்ளன. மினி வேன், டிராக்டர் செல்ல முடியாத பாதைகளில் பேட்டரி வாகனங்கள் மூலம் குப்பை சேகரிக்கப்பட்டு மெயின் ரோட்டில் நிறுத்தப்பட்டுள்ள டிராக்டர், வேனில் ஏற்றி சென்று அகற்றுவார்கள்.
நகரில் துாய்மை பணிகளை மேற்கொள்ள 23 நிரந்தர, தினக்கூலி அடிப்படையில் 80 துாய்மை பணியாளர்கள் உள்ளனர். குப்பை அள்ள பயன்படுத்தப்படும் வாகனங்களில் ஒரு டிராக்டர், மூன்று மினி வேன்கள், எட்டு பேட்டரி வாகனங்கள் கடந்த பல மாதங்களாக பழுதடைந்து கிடக்கின்றன. பேட்டரி வாகனங்களை முறையாக பராமரிக்காததால் பழுதடைந்து விட்டன. ஒருசில பேட்டரி வாகனங்களில் பேட்டரிகள் மாயமாகி விட்டன.
குப்பை அள்ள பயன்படுத்தப்படும் வாகனங்கள் பழுதடைந்து கிடப்பதால் அனைத்து வார்டுகளிலும் குப்பை முறையாக அகற்றப்படுவது இல்லை. நகரில் குப்பை தேங்கி சுகதாரக்கேடு நிலவி வருகிறது. கொரோனா பரவல் மாநிலம் முழுவதும் பரவி வரும் நிலையில் திருப்புவனத்தில் குப்பை அகற்றப்படாததால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. மேலும் வாகனங்கள் பற்றாக்குறை காரணமாக நாள் முழுவதும் குப்பை அள்ளும் பணியே நடப்பதால் சாக்கடை கால்வாய் துார்வாரப்படவே இல்லை. இந்திரா நகரில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக சாக்கடை கால்வாய் துார்வாரப்படாததால் கழிவு நீர் செல்ல வழியின்றி ரயில் நிலைய வளாகத்தில் தேங்கி சுகாதாரக்கேடு நிலவி வருகிறது. எனவே பழுதான வாகனங்களை சரி செய்து குப்பையை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.