/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் மாதந்தோறும் கூட்டம் நகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
/
மானாமதுரையில் மாதந்தோறும் கூட்டம் நகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
மானாமதுரையில் மாதந்தோறும் கூட்டம் நகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
மானாமதுரையில் மாதந்தோறும் கூட்டம் நகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
ADDED : பிப் 09, 2024 04:44 AM
மானாமதுரை: மானாமதுரை நகராட்சியில் மாதந்தோறும் கூட்டம் நடத்த வேண்டும் என நகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
மானாமதுரை நகராட்சி கூட்டம் தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது.துணைத்தலைவர் பாலசுந்தரம், கமிஷனர் ரங்கநாயகி, மேலாளர் பால கிருஷ்ணன், பொறியாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:
சதீஷ்குமார், தி.மு.க.,: தற்போது 27 வார்டுகளிலும் குடிநீர் குழாய் புதிதாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதிகளுக்கும் சமமாக குடிநீர் வழங்கும் வகையில் இப்பணி நடைபெற வேண்டும்.
மாரிக்கண்ணன், தி.மு.க.,: மானாமதுரை நகராட்சியில் தற்போது 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடைபெறுகிறது. மக்கள் பிரச்னைகளை கூட்டத்தில் தெரிவிக்க காலதாமதமாவதால் மாதந்தோறும் கூட்டம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர் மாரியப்பன் கென்னடி: அடுத்த மாதம் முதல் மாதம் தோறும் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தெய்வேந்திரன் அ.தி.மு.க., : மெயின் ரோடுகளில் தெரு விளக்குகள் முறையாக அமைக்க வேண்டும்.
பொறியாளர் முத்துக்குமார்: தெருவிளக்குகள் அனைத்து பகுதிகளிலும் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் நகராட்சி பகுதி முழுவதும் தெருவிளக்கு அமைக்கப்படும்.
பாலாஜி, தி.மு.க., : மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
பொறியாளர் முத்துக்குமார்: விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
சண்முகப்பிரியா, தி.மு.க.,: மானாமதுரையில் புதிதாக அமைக்கப்பட்ட மின் மயானத்தை உடனடியாக திறக்க வேண்டும், பைபாஸ் ரோட்டில் உள்ள மயானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொறியாளர் முத்துக் குமார்: மின்மயானம் அடுத்த வாரத்திற்குள் திறக்கப்படும்.

