/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் பெருகும் ஆக்கிரமிப்பு அலட்சியத்தில் நகராட்சி அதிகாரிகள்
/
சிவகங்கையில் பெருகும் ஆக்கிரமிப்பு அலட்சியத்தில் நகராட்சி அதிகாரிகள்
சிவகங்கையில் பெருகும் ஆக்கிரமிப்பு அலட்சியத்தில் நகராட்சி அதிகாரிகள்
சிவகங்கையில் பெருகும் ஆக்கிரமிப்பு அலட்சியத்தில் நகராட்சி அதிகாரிகள்
ADDED : ஜன 01, 2026 05:36 AM

சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அதிகரித்து வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது.
சிவகங்கை நகரின் முக்கிய கடை வீதியாக நேருபஜார், காந்திவீதி, தாலுகா அலுவலக ரோடு, அரண்மனை பகுதி, பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ள போஸ் ரோடு, மரக்கடை வீதி உள்ளது. இங்குள்ள ரோடுகள் ஆக்கிரமிப்புகளால் குறுகி விட்டது.
சிவகங்கை தொண்டி ரோட்டின் இருபுறமும் வாகனங்கள், கடைகளிலுள்ள பொருட்கள் வைக்கப்பட்டு ஆக்கிரமிப்பில் உள்ளது. மஜித்ரோடு, காந்திவீதி, மரக்கடை வீதி, நேரு பஜாரில் கடைக்காரர்கள் தங்களது கடையின் அளவை தாண்டி கால்வாயை மூடி கடை அமைத்துள்ளனர். இதனால் ரோட்டின் அளவு சுருங்கியுள்ளது. சிலர் கடை முன் வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர். தெரு ஓரங்களிலும் அனுமதியின்றி பெட்டிக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் அமைத்துள்ளனர்.
இந்த கடைகளால் ரோட்டில் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமப்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இந்த கடைகள் அனைத்தும் நகராட்சியிடம் அனுமதி பெற்று செயல்படுகிறதா இந்த கடைகளுக்கான தரை வாடகை யாரிடம் கொடுக்கப்படுகிறது என்ற கேள்வியும் எழுகிறது. அதேபோல் பஸ் ஸ்டாண்ட், கவுரிபிள்ளையார்கோவில் சந்திப்பு, ராமச்சந்திராபூங்கா, அரண்மனை பகுதியில் சிலர் ரோட்டை மறைத்து மின்கம்பங்களில் விளம்பர பிளக்ஸ் பேனர்களை கட்டி வைத்துள்ளனர். இவற்றால் வாகனத்தில் செல்வோரின் கவனம் சிதறல் ஏற்பட்டு விபத்து ஏற்படுகிறது.
நகராட்சி நிர்வாகம் அனுமதி இல்லாமல் வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களையும், ரோட்டோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையுள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

