/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரிக்கும் கழுத்து மணி சிவகங்கை அருகே ஒக்கூரில் தயாரிப்பு

ADDED : ஜன 01, 2026 05:36 AM

சிவகங்கை: ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்களை மிரட்டும் விதமாக ஜல்... ஜல்... சலங்கை சப்தம் எழுப்பும் கழுத்து மணி, பெல்ட், நெற்றி பாறையுடன் கம்பீரமாக களத்தில் இறங்க சிவகங்கை அருகே ஒக்கூரில் காளைகளுக்கு தேவையான கழுத்து மணி, மூக்கணாங்கயிறு தயாரிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் ஜன., முதல் மே வரை தமிழக அளவில் ஆயிரக்கணக்கான இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, விரட்டு மாடு, எருது கட்டு விடுதல் என பலவிதமான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. புலிக்குளம், காங்கேயம், தஞ்சாவூர் மாவட்டம் உம்பலபாடி, மைசூர் ரக காளைகள் தான் அதிக அளவில் களம் காண வளர்க்கின்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லுார், அவனியாபுரம், பாலமேடு, புதுக்கோட்டை மாவட்டம்விராலிமலை, சிவகங்கை மாவட்டத்தில் சிறாவயல், கண்டுபட்டி, அரளிப்பாறை போன்றவை ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடக்கும் இடங்களாகும். 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன., முதல் மே வரை ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற உள்ளன.
ஜல்லிக்கட்டு களத்தில் காளைகளை கம்பீரமாக காட்டுவதில் காளைகளின் உரிமையாளர்கள் தனி ஆவலாக செயல்படுவர். காளைகளுக்கு கழுத்து மணி, கால் சலங்கை, நெற்றி பாறை, தும்பு, கலர் கலராக ஒக்கூரை சேர்ந்த ராசு குடும்பத்தினர் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.