தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மஸ்ட் செப்புத் தகடு திருடியவர் கைது

மஸ்ட் செப்புத் தகடு திருடியவர் கைது

மஸ்ட் செப்புத் தகடு திருடியவர் கைது


ADDED : ஆக 21, 2026 07:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 07:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புத்துார்,ஆக.22-

திருப்புத்துார் ஒன்றியம் காரையூர் அய்யனார் கோயில் மற்றும் சிவன் கோயில் சோழம்பட்டி காளி கோயில் திருவுடையார்பட்டி சோலை சாத்த அய்யனார் கோயில் ஆகிய கோயில்களில் சிலைகளுக்கு அடியில் உள்ள செப்பு தகடுகளை திருடியவரை போலீசார் கைது செய்து தகடுகளை மீட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பாக திருப்புத்துார் ஒன்றியம் காரையூர் அய்யனார் கோயில் மற்றும்  சிவன் கோயில், சோழம்பட்டி காளி கோயில், திருவுடையார்பட்டி சோலை சாத்த அய்யனார் ஆகிய கோயில்களில் சிலைக்கு அடியில் செப்புத்தகடு திருட்டு போனது. திருவுடையார்பட்டி வழக்கில் கோயில் சிலை பெயர்க்கப்பட்டு தகடு திருட்டு போனதை அடிப்படையாக வைத்து எஸ்.ஐ.,ஹரிகிருஷ்ணன், தலைமையிலான போலீசார் விசாரணையை துவக்கினர். அப்பகுதியில் இருந்த கேமரா பதிவுகளை கண்காணித்ததில் துப்பு துலங்கியது.

தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட காரையூர் வெள்ளைச்சாமி மகன் முருகேசன் 58 என்பவரைக் கைது செய்து விசாரித்தனர். அதில் இவர் ஜோதிடம் பார்ப்பவர் என்பதும், கோயில்களில் சிலைகளுக்கு அடியில் வைக்கப்படும் செம்பிலான தகடுகளை திருடி வைத்துக் கொள்வது இவரது வழக்கமாக இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இவரைக் கைது செய்த போலீசார் இவரிடமிருந்து 10க்கும் மேற்பட்ட தகடுகளையும், வெண்கலத்திலான லெட்சுமி சிலையையும் கைப்பற்றியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us