ADDED : ஆக 21, 2026 07:50 PM
திருப்புவனம்,ஆக.22-
திருப்புவனம் அருகே ஏனாதியில் பாலை கீழே கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
திருப்புவனம் தாலுகாவில் தான் அதிகளவு கறவை மாடு வளர்க்கப்படுகிறது. தினசரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் 8 ஆயிரத்து 500 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளூரில் 4 ஆயிரம் லிட்டர் விற்பனை செய்தது போக காரைக்குடி ஆவின் நிறுவனத்திற்கு மீதி அனுப்பப்படுகிறது.
தற்போது அறிவித்துள்ள ஊக்கத் தொகையால் லிட்டருக்கு 41 ரூபாய் கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஆனால் பால் உற்பத்தியாளர்கள் இந்த தொகை போதாது என கூறி நேற்று மாலை ஏனாதியில் பால் உற்பத்தியாளர்கள் சார்பில் பாலை கீழே கொட்டி போராட்டம் நடத்தினர்.
பால் உற்பத்தியாளர்கள் கூறுகையில், எள், கடலை புண்ணாக்கு உள்ளிட்ட தீவனங்கள் இரு மடங்கு உயர்ந்துள்ள நிலையில் பால் விலையை மட்டும் 3 ரூபாய் உயர்த்துவது என்ன நியாயம். பால் விலையை லிட்டருக்கு 10 ரூபாய்,ஊக்கத் தொகை 5 ரூபாய் வழங்க வேண்டும், இல்லை என்றால் 24ம் தேதி முதல் ஆவின் நிறுவனத்திற்கு பால் விற்பனை செய்ய மாட்டோம், என்றனர்.
