ADDED : ஜூன் 26, 2025 01:10 AM

சிவகங்கை: காளையார்கோவிலில் சசிவர்ண முத்துவடுகநாத தேவரின் 253 வது குருபூஜை விழாவில் தேவஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
காளையார்கோவிலில் சசிவர்ண முத்துவடுக நாத தேவரின் குருபூஜை விழா நடந்தது. சிவகங்கை தேவஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமை வகித்தார். தேவஸ்தான மேலாளர் இளங்கோ முன்னிலை வகித்தார்.
மன்னர் கல்வி நிறுவன செயலர் குமரகுரு, சத்திர மேலாளர் வி.பூசை, மன்னர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் உட்பட தேவஸ்தான கோயில் கண்காணிப்பாளர்கள், ஊழியர்கள், மன்னர் பள்ளி ஆசிரியர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக நினைவிடத்திற்கு வந்தனர்.
அங்கு சிலைக்கு பால் அபிேஷகம் செய்தனர். மன்னரின் நினைவிடத்தில் சர்வ கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அன்னதானம் வழங்கினர். முத்துவடுகநாதர், ராணி வேலுநாச்சியார் மக்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.