/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்வதே என் கடமை புதிய கலெக்டர் பேட்டி

ADDED : ஜூன் 27, 2025 11:55 PM

சிவகங்கை: ''அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே என் கடமை,'' என சிவகங்கை புதிய கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
சிவகங்கை புதிய கலெக்டராக பொற்கொடி பொறுப்பேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கலெக்டர் பி.ஏ., (பொது) முத்துக்கழுவன் உட்பட அனைத்து மாவட்ட அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் வரவேற்றனர்.
கலெக்டர் கூறியதாவது: சொந்த ஊர் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம். மக்களுக்கான அனைத்து நல்ல திட்டங்களையும் அரசே செயல்படுத்துகிறது. அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே என் கடமை. மாவட்டத்தில் கல்வி, விவசாய வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்படும்.
டி.என்.பி.எஸ்.சி., மூலம் குரூப் 1 தேர்வெழுதி திருச்செந்துார் ஆர்.டி.ஓ., (கோட்டாட்சியர்). மாவட்ட பிற்பட்டோர் அலுவலகம்,அரியலுாரில் மாவட்ட வருவாய் அலுவலர், 2021 ல் சென்னை ஆவின் பொது மேலாளர், 2023ல் சென்னை துணை கமிஷனர் (மகளிர் உரிமை திட்டம்) பணிபுரிந்த போது தான், ஐ.ஏ.எஸ்., பதவி உயர்வு கிடைத்தது. 2024 முதல் சென்னை (ஆவின்) இணை மேலாண்மை இயக்குனர்.
தற்போது சிவகங்கை கலெக்டராக பொறுப்பேற்பு, என்றார்.