ADDED : நவ 24, 2025 09:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள நாகம்மாள் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக நேற்று மாலை 6:00 மணிக்கு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பாலாலய பூஜை நடைபெற்றது.முன்னதாக சுவாமிக்கு பால்,பன்னீர்,சந்தனம்,குங்குமம், நெய்,திரவியம், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
பாலாலய பூஜையில் பட்டத்தரசி, ராம் நகர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

