/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் தேசிய விழிப்புணர்வு நடை பயணம்: காங்., ஏற்பாடு
/
சிவகங்கையில் தேசிய விழிப்புணர்வு நடை பயணம்: காங்., ஏற்பாடு
சிவகங்கையில் தேசிய விழிப்புணர்வு நடை பயணம்: காங்., ஏற்பாடு
சிவகங்கையில் தேசிய விழிப்புணர்வு நடை பயணம்: காங்., ஏற்பாடு
ADDED : அக் 05, 2024 04:08 AM
சிவகங்கை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தேசிய விழிப்புணர்வு நடைபயணத்தை இன்று சிவகங்கை மாவட்டத்தில் காங்., கட்சியினர் துவக்குகின்றனர்.
தமிழ்நாடு காங்., சார்பில் சட்டசபை வாரியாக, காங்., கட்சியினர் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தேசிய விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்கின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று மாலை இளையான்குடியில் விழிப்புணர்வு நடை பயணத்தை துவக்குகின்றனர்.
இதில், சிவகங்கை எம்.பி., கார்த்தி, காங்., எம்.எல்.ஏ., மாங்குடி உள்ளிட்ட காங்.,தேசிய, மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
இம்மாவட்டத்தில் சட்டசபை தொகுதி வாரியாக இன்று துவங்கி, அக்., 9 ம் தேதி வரை இம்மாவட்டத்தில் நடைபெறுகிறது. இதில், காங்., கட்சியின் சாதனைகள், காந்தியின் கொள்கைகள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.