/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி, காளையார்கோவிலில் தேசிய ஒற்றுமை விழிப்பு ஊர்வலம்
/
காரைக்குடி, காளையார்கோவிலில் தேசிய ஒற்றுமை விழிப்பு ஊர்வலம்
காரைக்குடி, காளையார்கோவிலில் தேசிய ஒற்றுமை விழிப்பு ஊர்வலம்
காரைக்குடி, காளையார்கோவிலில் தேசிய ஒற்றுமை விழிப்பு ஊர்வலம்
ADDED : அக் 29, 2025 07:53 AM
சிவகங்கை: பட்டேல் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடி, காளையார்கோவிலில் ஒற்றுமை அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறும் என சிவகங்கை நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பட்டேலின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர்களிடம் மத்திய அரசின் நலத்திட்டங்கள், யோகா, சிலம்பம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். பட்டேலின் வாழ்க்கை வரலாறு குறித்த போட்டி நடத்தப்படும். ஒற்றுமை அணிவகுப்பு ஊர்வலம் அக்., 31 காரைக்குடி அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் கல்லுாரியில் காலை 8:00 மணிக்கு புறப்படும்.
துணைவேந்தர் ஜி.ரவி, மாங்குடி எம்.எல்.ஏ., துவக்கி வைக்கின்றனர். நவ., 3 ம் தேதி காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் காலை 10:00 மணிக்கு துவங்கும் ஊர்வலம் மதுரை ரோடு வழியாக புனித மைக்கேல் இன்ஜி., கல்லுாரி வரை செல்லும். இதில் மாவட்ட அளவில் உள்ள பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்கள், இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படை பயிற்சி மையம், அமராவதிபுதுார் மத்திய தொழில் பாதுகாப்பு பயிற்சி மைய வீரர்கள் பங்கேற்கின்றனர்.
ஊர்வலத்தை கலெக்டர் பொற்கொடி, சிவகங்கை எம்.எல்.ஏ., செந்தில்நாதன் துவக்கி வைக்கின்றனர். ஒருங்கிணைப்பாளர்களான காளையார்கோவில் புனித மைக்கேல் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் மகேந்திரன், பா.ஜ., மாவட்ட துணை தலைவர் சுகனேஸ்வரி ஆகியோர் தேசிய ஒற்றுமை ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என்றார்.

