ADDED : மார் 17, 2025 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டைதேவகோட்டை அருகே கானத்தான்காடு பகுதியில் ஆனந்தா கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்களின் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இக்கல்லுாரியை சேர்ந்த என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கானத்தான்காடு, சடையன்காடு, வளங்காடு ஆகிய கிராமங்களில் 7 நாட்கள் இப்பணியை மேற்கொள்ள உள்ளனர். அழகப்பா பல்கலை என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் ஜான்வசந்தகுமார், துணை முதல்வர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் தர்மராஜ் வரவேற்றார். தேவகோட்டை டி.எஸ்.பி., கவுதம் துவக்கி வைத்தார். வழக்கறிஞர் ஹரிபிரசாத், ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகர் முருகன், கிராம தலைவர் தன்ராஜ், பொருளாளர் சைமன் ராயப்பன் பங்கேற்றனர். பேராசிரியர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.