/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நாட்டரசன்கோட்டை தேர் வெள்ளோட்டம்
/
நாட்டரசன்கோட்டை தேர் வெள்ளோட்டம்
ADDED : செப் 04, 2025 11:39 PM
சிவகங்கை:நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட நாட்டரசன்கோட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதி கோயிலுக்கு, உபயதாரர்கள் சார்பில் பல லட்ச ரூபாய் செலவில் புதிய தேர் செய்தனர்.
இத்தேர் வெள்ளோட்டம் நேற்று காலை 10:00 மணிக்கு தொடங்கியது. பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு ரதவீதிகளை சுற்றி வந்து, காலை 10:40 மணிக்கு நிலையை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் கோயிலில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதி பெருமாளை தரிசனம் செய்தனர்.
தேவஸ்தான செரஸ்தார் சுப்பிரமணியன், கோயில் கண்காணிப்பாளர் கணபதிராமன், கவுரவ கண்காணிப்பாளர் கருப்பையா, சக்கர வர்த்தி, நாராயணன் அய்யங்கார் ஆகியோர் பங்கேற்றனர்.